பிரியாத ப்ரியம்!

பெப்ரவரி 4, 2007

உன் காதலுக்குதான் கண் இல்லை
நீ இல்லாமல் என் கவிதைகள்
அழுகின்றனவே அதாவது கேக்கிறதா?

என்னை மறந்து வாழத்தான்
இடம்பெயர்ந்தாய் என் நினைவுகளை
மறந்து வாழ என்ன செய்தாய்…

என் கண்ணைத்தான் அதிகம்பிடிக்கு மென்றாய்
உண்மைதான் அதை மட்டும்தான் என்னால
அடக்க முடியவில்லை

என்னை உண்மையாக காதலித்தாய்
என்றால் என்னை மறந்துவிடு என்றாய்
அப்போதுதான் பொய்யானது என் காதல்

வாழ்க்கை ஒரு போர்க்களம்
புரிந்து கொண்டேன் காதலி
என்றஆயுதத்தை தொலைத்தபின்

என்னை எனக்கே பிடிக்காத போதுதான்
உன்னை மட்டும் பிடித்தது அதே என்னை
எல்லாருக்கும் பிடிக்கும் போது எப்படி
பிடிக்காமல் போனது உனக்குமட்டும்
என்னை

என்னை ஞாபகப்படுத்த எந்த கவிதையும்
எழுதியதில்லை எழுதும் கவிதை எல்லாமே
என்னை நீ மறக்காமல் இருந்தால் மறக்க
வைக்கத்தான்

இப்பொழுது எல்லாம் உன்னை
நினைக்காத போதும் கண்ணீர்வருகிறது
நீதான் என் கண்ணில்படாமல் வாழ்கிறாயே

என்னை ஞாபகப்படுத்தும் எந்தபொருளையாவது
காண நேர்ந்தால் தயவுசெய்து அனாதையாய்
விட்டுவிடாதே ஏதாவது ஒரு குப்பைத் தொட்டியில்
போட்டுவிடு கோடி புண்ணியம் கிடைக்கும்

-யாழ்_அகத்தியன்

பிரியுமா பிரியம்!

பெப்ரவரி 4, 2007

என் ஞாபகங்கள் எப்போதாவது
வந்தால் உன் குழந்தையை கிள்ளிவிடு
நான் உனக்காய் அழுவதும் உனக்கு
ஞாபகம் வரட்டும்

உனை பிரியமாய் பார்த்த
அதே கண்களால்த்தான்
உன் பிரிவையையும் பார்க்க வைத்து
குருடாக்கினாய் என் கண்களை

எனை சந்திக்காமல் இருக்கத்தான்
இடம்பெயர்ந்தாய் என்று சொல்லி இருந்தால்
நான் உனக்காய் என் உயிரை சாகடித்திருப்பேனே…

என் கவிதைகளை பிடித்த அளவுக்கு
உனக்கு என்னை பிடிக்கவில்லை
அதனால்த்தானோ என்னைவிட்டு
பிரிகிறது உன்னை போல் என்
கவிதைகளும்

காதலுக்கு கண் இருக்கிறது
காதல் பிரிவுக்குத்தான் கண் இல்லை
ஆமாம் நான் பாக்கக்கூடியதாய்
நீ பாக்காமல் பிரிந்து போனாயே..

-யாழ்_அகத்தியன்

எனக்குள் நீ!

ஜனவரி 30, 2007

நமக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம்
வேண்டாம் நமக்குள் சமாதான ஒப்பந்தம்
செய்து கொள்வோம் அப்படியென்றாலாவது
சமாதான மீறல் புரிகிறாயா என்று பாப்பம்

நான் குடிக்கவேயில்ல இருந்தபோதும்
குடிகாரனாய் நடிக்கிறேன் உன்னை
பேசவைக்க வேண்டுமே

என்ன தவம் செய்ததோ என் வார்த்தைகள்
உனக்காய் கவி எழுதுகையில் மெய் எழுதுக்களும்
உயிர் பெற்று விடுகின்றது

மழை விட்டது உனக்கும் தெரியும்
எனக்கும் தெரியும் இருந்தும் என்
குடைக்குள் இன்னும் நீ

கோவம் வரும் போது உன்னை
நினைக்க சொன்னாய் வராத போதும்
உன்னை நினைத்தேன் இப்ப என்னை
நினைப்பாயோ

-யாழ்_அகத்தியன்

தண்டனை!

ஜனவரி 30, 2007

எழுத்துக்களை சிறைப்பிடித்து
உனக்கு கவிதை எழுதினேன்

அதைக் கிழித்தெறிந்து
தண்டனையை எனக்கு
கொடுத்தாய்

-யாழ்_அகத்தியன்

என் பேனாவின் ரகசியம்!

ஜனவரி 19, 2007

என் முதல்க் கவிதையை
யார் கேட்டாலும் அழகாய்
எழுதிக்காட்டுகிறது உன் பெயரை

*

கண்மூடி கிறுக்கிவிட்டு
கண் திறந்து தேடுகிறேன்
ஏதாவது கவிதை எழுதியிருக்குமா
என் பேனாவென்று

தெரிந்தே எழுத்துப் பிழைவிடுவது
என் பேனாதான்
உன் பேனாவுக்கு நன்றி சொல்ல

என்னைக் கேட்பாய் என்று நினைத்தால்
நீ என் பேனாவை கேக்கிறாய் எப்படி

பிடிக்கும் இனி என் பேனாவை எனக்கு

உலகமே சந்தேகப்படுகிறது என் பேனா
யாருக்காக தலைகுனிகிறதென்று அதை
அறிந்த நீ வேணுமென்றே சந்தேகபடுகிறாய்
யாரிடம் வாங்கினேன் என் பேனாவையென்று

உன் தோழிகள் மட்டும்தான்
கண்டு பிடிக்கிறார்கள் உன்
சினுங்களை மட்டும் கவிதையாய்
வடிக்கிறது என் பேனாவென்று

உன் புகைப்படத்தோடு
ஒரு நாள் இருந்த பின்தான்
என் பேனா கவி எழுத மறுக்கிறது

உனக்காய் எழுத நினைத்த
எந்த கவிதையையும்
எழுதவேயில்லை என் பேனா
அதனால்தான் இன்னும்
நான் கிறுக்கனாய்

-யாழ்_அகத்தியன்

என் டைரி!

ஜனவரி 19, 2007

என் டைரியை வாசித்து விடு
என் ஏக்கங்களை புரிந்து கொள்ள

என் கவிதைகளை வாசித்துவிடு
என் காதலை புரிந்து கொள்ள

உண்மையைத் தெரிந்து
கொள்ள வேண்டுமா?

என்னை வாசித்து விடு
உன்னைத் தெரிந்து கொள்வாய்

-யாழ்_அகத்தியன்

உலகம்!

ஜனவரி 9, 2007

உன்னைச் சுற்றி வரச்சொன்னா
என் கவிதைகள் உலகம் சுற்றி
வருகிறது

உலகம் சுற்றி வரச்சொன்னா
நான் உன்னை சுற்றி வருகிறேன்

-யாழ்_அகத்தியன்

பாதை!

ஜனவரி 9, 2007

நீ நடந்து பழகிய பாதை
எங்கே காட்டிக்கொடு
நான் ஊர்ந்து பழக வேண்டும்

-யாழ்_அகத்தியன்

தேடலின் சுகம்!

ஜனவரி 9, 2007

உன்னைத் தேடிய
களைப்பில்த்தான் என்னைக்
கவிஞனாக்கிக் கொண்டேன்
உன்னைக் களைப்போடு
சந்திக்க விரும்பாமல்

-யாழ்_அகத்தியன்

வெற்றிடம்!

ஜனவரி 9, 2007

நீ இல்லாத வெற்றிடத்தை
யாரல் நிரப்ப முடியுமென்று
எண்ணிக்கொண்டிருந்தேன்
உன் பிரிவுக்காய் அழப்போன
அனாதையின் மரணவீட்டின்
முலையில் நான்

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.