நவம்பர், 2006 க்கான தொகுப்பு

தோல்வியே!

நவம்பர் 30, 2006

நீ
இல்லாத
காதலும்

காதல்
இல்லாத
நீயும்

என்றும்
எனக்கு
தோல்வியே!

காண்டீபன்

தெரிந்தும்!

நவம்பர் 28, 2006

உனக்கு நான் ஏழை
என்று தெரிந்தும்
விலை போனாய் மலிவாய்
உன்னை விட பணக்காரனிடம்!

-காண்டீபன்

இலவசம்!

நவம்பர் 28, 2006








உன்னிடம்
நான் இலவசமாய்க்கூட
எதிர் பாக்காத பரிசு

நான்
வேணாமென்று
சொல்லியும்
நீ தந்து விட்டு
போன பரிசு

ஆமாம்..
என் மரணம் வரை மறக்க
முடியாத உன் பிரிவென்ற பரிசு

*

இலவசமாய் எதுவும் கிடைக்கவில்லை
என்பதற்காய் பெறுமதி வாய்ந்த ஆண்கள்
அழுவது பிடிக்காதென்றாய்

ஓ..
அப்படியென்றால் பெறுமதி வாய்ந்த
நீ கிடைக்கவில்லை என்று நானழுவது தவறா?

*
சொல் உன்னை நினைத்துக் கொண்டே
நான் இறக்க வேண்டுமென்றா?
பெறுமதி வாய்ந்த என் மறதியை
கடனாய் வாங்குவதாய் களவாடி போனாய்?

*
சொல் நீ என் பெறுமதி வாய்ந்தவள்
என்பதால் உன்னை வாழ வாழ்த்தவா?

இல்ல பிரிவில் மட்டும் நீ தனியாய்
போனதை எண்ணி திட்டவா?

*
இலவசமாய்க்கூட யார் பார்வையும்
படாதவனாய் படு மோசமான
பாலைவனமாய்க் கிடந்தேன்
எதற்கடி விழுந்தாய் என் மேல்
முதல் மழையாய்?

*
குடிசை வாங்க கூட பெறுமதி
இல்லாதவனை எதற்கடி
கோட்டைகளை வாங்குமளவுக்கு
நம்பிக்கைகளை ஊட்டினாய்?

*
அன்று
உன் முதல் பார்வையிலே
நான் உருகியபோது நான்
பலவினமானவனென்று
எண்ணவில்லை

உன் பார்வையின் பலத்தைதான்
பாராட்ட நினைத்தேன்ஆனால்
இன்று என் நினைவே பார்வையாக
பார்வையே நினைவாக இலவசமாய்க்
கழிக்கிறேன்

*
கையெழுத்து மட்டும் போட
பேனா பிடித்த கிராமத்தவனை
கவி எழுத வைத்தவளே..

உன்னால்
எப்படி முடிந்தது?

இலவசமான என்னை
பெறுமதி வாய்ந்ததாய்
ஆக்கவும்

பெறுமதி வாய்ந்த உன்னை
பெற்றோர்களுக்காய்
இலவசமாக்கவும்

*
என்
கண்ணிரை துடைத்துவிடத்தான்
உன் கரங்களுக்குஎட்டாது
என் கவிதையின் கண்ணிரை
துடைப்பதற்காகவேனும்

ஆழமான சமுத்திரத்தையே
அடக்கி வைத்திருக்கும்
உன் கண்களால் இலவசமாய்
பார்த்துவிட்டுப் போ

பெறுமதி வாய்ந்த உன்
கண்ணீரைத்தான் தேடி
திரிகிறது என் கவிதைகள்
நாளைய என் மரணத்துக்காய்
அழுவதற்கு!

காண்டீபன்

யாரிடம்..?

நவம்பர் 28, 2006

தனிமை விட்டு
இனிமை காண
இளமையோடு
புதுமையாக
வந்தவளே!

அருமையாக
அறிமுகமானாய்
அவதரித்தேன்
ஆண்மையோடு…

ஆகா அருமையானவளே!

உரிமையோடு
உயிரோடு பேசி
பெண்மை ஒரு உண்மையென்று
பேச வைத்தவளே!

கரம் பிடித்த கணப் பொழுதில்
கவலைவரினும் விலகிடேன் என
வினாவாக்கி விடையளித்தவளே!

உலகம் மறந்து
உனை நினைகிறேன்
என்ற உண்மை மட்டும் உரைத்தேன்.

உன் மடியில் மரணிக்கும்வரை
மறந்தும் பிரிய மாட்டேன் என
எனை மயக்க வைத்தவளே!

எனக்குள் நான்
பிரிவெனும் வார்த்தையை
அயுள் வரை
சிறையிட்டுள்ளேன் என்றேன்.

தானோ பிரிவெனும் வார்த்தையை
தன் அகராதியில் இருந்து
எரித்து விட்டேன் தெரியுமா…?
என்றவளே!

“யாரிடம் உன் பிரியத்தை விற்று விட்டு
பிரிவை வாங்கி பிரித்தாய்
என் பிரியமான உனை
என்னிடம் இருந்து”

-காண்டீபன்

காத்திருக்கும் என் கவிதைகள்!

நவம்பர் 28, 2006

எனக்குள் அவளை
புதைத்து வைத்தாள்!
என்னை எனக்குள்
தேட வைத்தாள்!

விதியிடம் மதியை
கெஞ்ச வைத்தாள்!
தெய்வத்தால் என்னை
தேட விட்டாள்!

அடி வாங்காத என்னிதயத்தை
இடி தாங்க வைத்தாள்!
விழியை மூட வைத்து
மொழிக்குள் என்னை விட்டு
வார்த்தைகளைத் தேட வைத்தாள்!

படிக்காத என்னைக் கொண்டு
படிக்காத வார்த்தைகளால்
கவி வடிக்க வைத்தாள்!

என்னைக் கவிஞனாக்கி விட்டு
கணவன் வீட்டுக்குப் போனவளே!
காத்திருக்கும் என் கவிதைகள்
காலமெல்லாம் உன் கண்களுக்காய்…

-காண்டீபன்

மறந்து!

நவம்பர் 27, 2006

கரைந்த துளியை
தேடும் புல் போல்
தேடுகிறேன் உனை

நீ
வேரோடு
கலந்ததை
மறந்து

-காண்டீபன்

மறந்து!

நவம்பர் 27, 2006

கரைந்த துளியை
தேடும் புல் போல்
தேடுகிறேன் உனை

நீ
வேரோடு
கலந்ததை
மறந்து

எட்டாத நிலவு!

நவம்பர் 27, 2006

அந்த நிலவு
கனவு கண்டால்
உன்னைத்தான் காணும்

ஏன் தெரியுமா…?

அந்த நிலவுக்கும்
எனக்கும் எட்டாத
நிலவு நீதானே.