உன் மெளனம்தான் சம்மதம்
என்றென்னி சாலை எங்கும்
சரணம் பாடித் திரிந்தேன்
உன் பேச்சில் ஏற்பட்ட காயம்தான்
அந்த மெளனம் என்று நீ
சொல்லும் வரை
-யாழ்_அகத்தியன்
உன் மெளனம்தான் சம்மதம்
என்றென்னி சாலை எங்கும்
சரணம் பாடித் திரிந்தேன்
உன் பேச்சில் ஏற்பட்ட காயம்தான்
அந்த மெளனம் என்று நீ
சொல்லும் வரை
-யாழ்_அகத்தியன்
என்ன அதிசயம்
உன்னைக் கண்டதும்
சூரியன் நேரத்துக்கே
தூங்க போகிறது
ஓ….
நீதான் நேரம் தவறி
நேரத்துக்கு வந்து
விட்டாய் அதனால்தான்
என்னவளே இனியாவது
நீ நிலவென்பதை மறக்காமல்
வர வேண்டிய நேரத்தில் வா
-யாழ்_அகத்தியன்
தனக்காய் வாழ்ந்து மறைந்தவர்கள் கோடி எனக்கும் தெரியும் ஒரு நாள் பிரியும் உயிர் என்று நீ எங்களுக்காய் வாழ்ந்த உன் அயுளில் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் உனக்காய் வாழ்ந்திருந்தால் உனை நோய் கொண்டு போயிருக்காது அப்படியென்ன உன்னை மீறிய அக்கறை தேசம் மீதும் மக்கள் மீதும் உனக்கு
உனக்கு தெரியுமா? ம்…. உனக்கெப்படி தெரியும் தேசத்தின் குரலாய் நீ வாழ்ந்தாய் என்று உனக்குத்தான் பட்டம் பதவி புகழ் எதுவுமே பிடிக்காதே
நீ விழி மூடியதால் எங்கள் தேசம் ஊமையானதும் உலக தமிழ்மக்கள் கண்ணிரில் மிதப்பதும் உன் பிரிவைப் பாட வார்தைகள் தேடித் தேடித் பேனாக்களே தற்கொலை செய்து கொள்வதை எல்லாம் உனக்கெப்படித் தெரியும்
நீதான் ஈழக்குழைந்தை கருவுற்ற காலம் முதல் பெறும் வருசம் வரை வாழ்ந்து விட்டு குழந்தையைப் பார்க்காமல் விழி மூடிவிட்டாயே இன்னும் கொஞ்ச காலமாவது உன் அயுளைமிச்சம் வைத்திருக்கலாமே உன் முத்தம் வாங்கும் பாக்கியத்தையாவது ஈழக் குழந்தை பெற்றிருக்குமே
உன் பெயர் ஈழ வரலாற்றில் இடம் பிடித்தாலும் எங்கள் வரலாற்றில் உன் பிரிவு வெற்றிடமாவே என்றும் இருக்கும்
உன் திறமையும் உன் வாழ்க்கையும் உன் வழி காட்டலும் உன் தத்துவங்களும் ஏன் உன் இறப்புக் கூடா என் போன்றவர்களுக்கு என்றும் பாடமாக இருக்கும்
உன் பிரிவால் வாடும் உன் துணைவியுடனும் எம் தேசத்தின் கண்ணீரோடும் நானும் கலந்து கண்ணிரில் குளிக்கிறேன் உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்
மனிதர்கள் மட்டுமே இறக்கிறார்கள்
மாமனிதர்கள் இறப்பதில்லை
அவர்கள் வரலாறாக என்றும் வாழ்கிறார்கள்
–யாழ்_அகத்தியன்
என்னை வெப்கொம்மில்
விடாமல் பார்க்கிறாயே
ஏன் வீட்டில் யாருமே
இல்லையா?
************************
ஹையோ ! செல்லம் நீ
திமிரா பேசும் போதே
நினைத்தேன் இவ்வளவு
அழகாய் இருப்பாய் என்று
அடிக் கள்ளி
*************************
கண்டதும் காதலில் எனக்கு
நம்பிக்கை இல்லாமல் போனது
சாட்டில் உன்னை சந்தித்ததால்
***************************
உலகமே என்னை ஒதுக்கிவைத்தாலும்
ஆன்லைனில் நீ நின்றால் போதும்
உலகத்தையே ஒதுக்கி வைப்பேன்
உனக்கு முன்னாலே
**************************
நாம்
சாட்டில் பேசும்போது நமக்கே
தெரியாமல் பல கவிதைகள்
இறந்து போகிறது இனியாவது
நாம் பேசுவதை பதிந்துவை நீ
கிழவி ஆகும் போது படித்துக்
காட்ட வேண்டும்
*****************************
என் கணனி என்னவோ
நான் தன்னை பார்பதாய்
நினைத்து ரொம்ப
வெக்கப்படுகிறது நீ
ஆன்லைனில் வந்துவிட்டாயா
என அடிக்கடி நான் பார்க்கும் போது
****************************
என் மெசெஞ்சரை கேட்டுப் பார்
என் காதலை உன்னிடம் சொல்ல
வந்து எத்தனை தடவை உனக்கு
அனுப்பாமல் அழித்த கவிதையை
******************************
என் அம்மா ஊருக்கே சொல்கிறா
என் மகனுக்கு கணனியில் எல்லாம்
தெரியும் என்று அவாக்கு எப்படி தெரியும்
எனக்கு உன்கூட சாட் பண்ண மட்டும்தான்
தெரியும் என்று
-யாழ்_அகத்தியன்
ஒரு நாள் உன்னை விட்டு பிரிந்து
வந்ததற்கே எப்படி பிரிய முடிந்ததென்றா
கேக்கிறாய் எங்கே உன் இதயத்தை
திறந்து பார் பிரிவுக் கவிதை
எழுதிக்கொண்டிருப்பேன்
**************************
நீயே சொல் ..
என் நம்பிக்கை நீயென்ற பின்
நம்பிக்கை இல்லாமல் நீ
தள்ளியே நின்றால் விழுந்திட
மாட்டெனோ
*************************
உன் முதல் சந்திப்பும்
உன் முதல் பிரிவும்
சில நாட்களுக்குள்
நடந்தேறியிருந்தாலும்
உன் பிரிவு மட்டும் இன்னும்
என்னை வாட்டுகிறது
************************
உனக்கும் இரவில் உலாப் போக
பிடிக்குமா சரி வா போய் வருவோம்
அதற்க்கு முன் நிலாவிடம்
சொல்லிவிட்டு வா கொஞ்ச நேரம்
ஓய்வெடுத்து வரும்படி
**************************
உன்னை நான் பார்க்க வரும் போது
மட்டும்தான் ஏறும் பேருந்தையும்
இறங்கும் தரிபிடத்தையும் பக்கத்தில்
இருப்பவர்களிடம் கேட்டு தெரிந்து
கொள்கிறேன் அவ்வளவு அவசரம் எனக்கு
-காண்டீபன்
இனியவளே..
என் காதலை சொல்ல ஒன்றுக்கு
மூன்று பூக்கள் பறித்து வந்தேன்
ஏதேனும் ஒன்றாவது வாடாமல்
இருக்குமென்று
என்ன அதிசயம் பூவான
உனைக் கண்டவுடன் எல்லா
பூக்களும் சிரிக்கிறது
***************************
அழகான பூவாக
இருந்தாலும்
பூக்கடையில் பூ
வாங்க பிடிக்காது
அவர்கள் யாரை
நினைத்து பறித்தார்களோ
யாருக்கு தெரியும்
*************************
தயவு செய்து
என்னை கவிஞன்
என்று எப்போதும்
ஏற்றுக்கொள்ளாதே
ஏனெனில்
ஒவ்வொரு தடவையும்
நான் உண்மை சொல்லும்
போதும் உன்னிடம் உண்மை
சொல்லவாவென கேட்டு விட்டு
சொல்ல வேண்டி வரும்
***********************
என் நம்பிக்கைதான் நீ என்று சொன்ன
பின்னும் உன் வாழ்க்கையை தர மறுத்தால்
நம்பிக்கைதான் வாழ்க்கை என்பது பொய்த்து
விடுமல்லவா நீயே சொல்…….
-காண்டீபன்
உன் ஒவ்வொரு சந்திப்பின்போதும்
காதல் என்னை மொழிபெயர்த்து
கவிதையாய் அழகுபடுத்தியது.
*
உன்னை நினைத்துக் கொண்டு
என்னைப் பார்தால் கண்ணாடியிலும்
நீதான் தெரிகிறாய்
*
உன்னை பார்க்க கவிதையோடுதான்
தினம் வருவேன் கண்டதும் மெளனமாய்
தலை குனிகிறேன்
*
கண்டபடி வெளியில் சுத்தாதே
உன்னில் விழிக்க எல்லாரும்
தவம் கிடக்கிறார்கள்
-காண்டீபன்
இனியவளே…
என்னைக் கோவப்படுத்தி
பார்ப்பதற்க்கானா உன் தேடல்
தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது
தோல்விக்கு மத்தியிலும்
ம்ம்…
உனக்கெப்படி தெரியும்
உன்னை யாரும்
கோவப்படுத்தினால்தான்
எனக்கு கோவம் வருமென்று
***********************************
நமக்குள் பிரிவே வரக்கூடாது
அப்படி வந்தால் உன்னால் வரக்கூடாது
ஏனெனில் அந்த சோகத்தின் கதாநாயகியாக
நீ இருந்துவிட கூடாதென்பதால்
***********************************
உன் கல்மனதுக்குள்
நுழையும்வரைதான்
யோசித்தேன் எப்படி
நுழைவதென்று
நுழைந்தபின் மறந்தே
போனேன் எப்படி யோசித்து
நுழைந்தேனென்று
***********************************
கவிதைகள் எழுதத்
தெரியுமா என்று கேட்டார்கள்
நான் தெரியாது என்றேன்.
அப்ப என்ன தெரியுமென்று
கேட்டார்கள்
கவிதை ஒன்று
தெரியுமென்றேன்.
எங்கே சொல் என்றார்கள்
உன் பெயரைச்
சொல்லி முடித்தேன்.
-காண்டீபன்
இனியவளே..
உனக்கு காதலனாய்
பிறந்ததை விட
உன் காதலாக
பிறந்திருக்கலாம்
அப்படியென்றாலாவது
உன்னோடு சேர்ந்து
உன் கூட வாழ்ந்திருக்கலாம்.
***********************************
கவனமாய் கார் ஓடு
உன்னை கொஞ்ச நேரமாவது
காற்று வாங்க வைக்க ஏதேனும்
ஒரு சந்தியில் சிக்னல் விளக்காய்
காத்திருப்பேன்.
***********************************
உன்னைப் பார்த்தால் மட்டும்
என் கவிதைகள் கண்ணாடி
போடுகிறது
ஏனுங்க..
ம்ம்..
உனக்காய் காத்திருந்து என்னைப்
போல் என் கவிதைகளுக்கும் கண்
தெரியாமல் போய் விட்டது போல
***********************************
உன்
தொலைபேசிக்கு எனக்காக
நீ கொடுத்த முத்தத்தால்
ரொம்ப கவலைப்படுகிறது
என் தொலைபேசி
உன் தொலை பேசியாய்
பிறந்திருக்கலாமெயேன்று.
-காண்டீபன்
இனியவளே…
என் இறந்த காலம்
மிக சோகமானது
அதை மறக்க வைக்க
இறைவன் கொடுத்த
நிகழ்காலம்தான்
நீ எனக்கு
**********************************
நான்
பொய் சொல்ல
விரும்பவில்லை
உன்னை ஞாபகப்படுத்த
உன் புகைப்படம் வேண்டாம்
உன் புன்னகையும் வேண்டாம்
உன் கவிதையும் வேண்டாம்
ஏன் உன் நினைவும் வேண்டாம்
உன்னை ஞாபகப்படுத்திக்கொண்டே
இருக்க எதுவாலும் முடியாது
உன்னைத்தவிர எனக்கு
*********************************
இதுவரை நான் அசிங்கமானவன்
என்று சந்தோசப்பட்டதில்லை
நீ அழகானவன் என்று சொல்லும் வரை
***********************************
நான் உன் கவிதையின் ரசிகன்
அதனால்தான் சொல்கிறேன்
இன்றே இறந்து போக தயார்
அடுத்த நொடியே நான் உன்
பேனாவாக பிறப்பேன் என்ற
உறுதி மொழி கிடைக்குமென்றால்
-காண்டீபன்