என் சைக்கிள் கடை!

By kandeepan

நீ விருப்ப பட்டால் உன் சைக்கிளை
கை பிடிக்காமல் ஓடிக்காட்டுவேன்
நீ விருப்ப பட்டாலும்
உன்னை விட்டு ஓட மாட்டேன்

அடிக்கடி நீ என் சைக்கிள் கடைக்கு
வரவேன்டும் என்பதற்க்காகவே
உன் சைக்கிளுக்கு சில நட்டுகளை
மட்டும் பூட்டி விடுகிறேன்

உழக்கினா ஓடும் சைக்கிள்
உன்னை நினைத்தால்
ஓடும் கண்ணீர்

உன் சைக்கிளின் காயத்துக்கு
மருந்து கட்ட தெரிந்த‌ நான்
கொஞ்சம் படித்திருந்தால்
உன் காலின் காயத்துக்கும்
மருந்து கட்டி இருப்பேன்

என்னிடம் இருக்கும் எந்த
சாவியும் பொருந்தவே இல்லை
உன் மனதின் நட்டை இழக்க‌

நீ கோப‌பட்டு என் சைக்கிள்
கடைக்கு வர மறுத்தால்
உன் கோபத்தை முட்களாக்கி
உன் பாதையெங்கும் விதைப்பேன்

உன்னை சந்திக்க வைச்சதும் சைக்கிள்
உன்னை பற்றி பாட வைத்ததும் சைக்கிள்

நீ பிரிந்து போக காரணமாய் இருந்தது
மட்டும் நான் ஒரு சைக்கிள் கடைக்காரன் என்பதுதான்.

-காண்டீபன்

மறுமொழி இடுக