‘இனியவளே...! [1]’ பகுப்புக்கான தொகுப்பு

இனியவளே…! [1]

டிசம்பர் 1, 2006

உன் ஒவ்வொரு சந்திப்பின்போதும்
காதல் என்னை மொழிபெயர்த்து
கவிதையாய் அழகுபடுத்தியது.

*

உன்னை நினைத்துக் கொண்டு
என்னைப் பார்தால் கண்ணாடியிலும்
நீதான் தெரிகிறாய்

*

உன்னை பார்க்க கவிதையோடுதான்
தினம் வருவேன் கண்டதும் மெளனமாய்
தலை குனிகிறேன்

*

கண்டபடி வெளியில் சுத்தாதே
உன்னில் விழிக்க எல்லாரும்
தவம் கிடக்கிறார்கள்

-காண்டீபன்