என்னோடு நடந்து வந்த நட்பு
ஏன் உன்னைக் கண்டதும் ஓடி
ஒழிகிறது ஓ… அவ்வளவு
பயமா காதலுக்கு
*
காதலைக் காட்டிக் கொடுக்காதேயேன்று
அதிகமாய் என்னிடம் உன்னைப் பார்க்கும்
போதுதான் குட்டு வாங்கிகிறது என் மனம்
*
நீ கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டும்
சொல்ல தயங்குகிறேன் என்
முதல் கவிதை உன் பெயர் என்று
*
ஒரு காதல் பறவை என் மேல்
உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறது
என் நட்பென்ற தொடர் நாடகத்தை
-காண்டீபன்