‘இனியவளே...! [8]’ பகுப்புக்கான தொகுப்பு

இனியவளே…! [8]

டிசம்பர் 1, 2006

ஆகா… இன்று உன்
பார்வையே சரியில்லையே
ஓ… நம்ம கல்யாணத்தைப்
பற்றி பேச போறியா?

*

நாளை முதல் கதைக்க மாட்டேன் என்கிறாய் தினமும்
கதைத்துக் கொண்டே ஓ…..
நீயும் பரம்பரைக் குடிகாரியா?

*

என்னை விட்டு விலகிடு

என்கிறேன் முடியாதென்கிறாய்

அப்படியென்றால் நீ என் உயிரா?

மரணத்தால் மட்டுமே உன்னை பிரிந்து விட

*

என்னவளே உனக்கு தெரிய வேண்டுமா? உன் பார்வையின் வலிமை என்னவென்று
அப்படியே உன் வீட்டுகண்ணாடியை நானாக
நினைத்து ஒரு தடவை பார் அது உடையும்
வடிவில் தெரிந்து கொள்வாய்

-காண்டீபன்