‘கண்ணீரால் ஒரு கவிதை!’ பகுப்புக்கான தொகுப்பு

கண்ணீரால் ஒரு கவிதை!

டிசம்பர் 1, 2006

கண்ணீர் கன்னம் நனைக்க
காதல் கால் நனைக்க
கனவின்றி கண்சிவந்து
கவிதையோடு தவம் கிடக்கிறேன்

ஒரு நாள் மறையவே
ஒரு ஜென்மம் போகுதடி
மறு நாள் வராமல் போகுமென்றே
மரணத்துக்காய் காத்திருக்கிறேன்

என் காதலும் என் கண்ணிரும்
என்னை நனைத்தே அழுக்காக்க
இன்னும் நீ மாறவில்லை

பழகிய நாட்களை மறக்கவே
பல வருசம் கிடக்கையில
பாவை உன் முகம் மறக்க
எத்தனை ஜென்மம் நான் எடுக்க

மறக்கத்தான் சொன்னாயா
மறந்துவிட சொன்னாயா
என்ற காரணத்தை கேக்கவே
பேசாமல் போய்விட்டாய்

கிறுக்கன் நான்
காதலை சொல்லி சொல்லி
கவிதையே செத்துடிச்சு

உன் பெயரை மறந்தேனென
துணிவாய் நான் சொல்ல
நினைத்தாலும் என் பேனா
எனோ உன்பெயரை
எழுதி தொலைக்கிறது

விட்டுபோகாதே விட்டுபோகாதே
என உன் கால் பிடிச்சு கெஞ்சியும்

உன் படம் மட்டும் பார்த்தவன்தான்
பெரிதிண்ணு பார்க்காம போனாயடி

ஒரு பானை சோத்துக்கு
ஒரு சோறு போதுமடி

ஒட்டுமொத்த பெண்களையும்
உன்னில் பார்த்ததால்- உன்னால்
உன்னால்த்தானடி
பெண்களை வெறுத்தேன்

உனக்காய் எழுத நினைத்தால்
வார்த்தை வர மறுக்கிறது

இறுதியாய் ஒன்று

என் கவிதைகள் அழிந்தாலும்
என் காதல் பொய்யானாலும்
உன்னை நினைத்தே
என் உருவம் சிதைந்தாலும்

உன்னால் நான் அடைந்த
அனுபவங்கள் அனைத்தும்
என் உயிரின் ஆணி வேரில்
என்றும் எழுதி இருக்கும்

கடைசியாய் ஒன்று

என் கவிதைகளை
எங்கு கண்டாலும்
கண்ணீரை துடைத்து விடு

-காண்டீபன்